நடப்பு நிகழ்வுகள் 2019 -(5/9/2019)

2018-19 CURRENT AFFAIRS-Click Herer

நடப்பு நிகழ்வுகள் 2019 -(5/9/2019)

13.இன்று புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடந்தது. அங்கு நடந்த விழாவில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி 19 ஆசிரியர்களுக்கு  நல்லாசிரியர் விருதை வழங்கினர். அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்


12. இந்திய ரெயில்வேயின் இரு வழித்தடங்களில் தனியார்களை வைத்து  ரெயில்களை இயக்க  ரெயில்வே வாரியத்தலைவர் வி.கே.யாதவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


11.தூர கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவுக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்குகிறார்.


10. உலகில் சுற்றுலா செல்ல தகுந்த நாடுகள் வரிசைபட்டியலில் இந்தியா 34-வது இடத்தில் உள்ளது என உலக பொருளாதார மன்ற அறிக்கை கூறுகிறது.

இதில் ஸ்பெயின் முதலிடத்தைப் பிடித்தது. ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஜப்பான்  ஆகிய நாடுகளும், இங்கிலாந்துக்கு பதிலாக அமெரிக்கா முதல் ஐந்து இடங்களைப் பிடித்தது.

முதல் 10 இடங்களில் இங்கிலாந்து 6-வது இடத்திலும், ஆஸ்திரேலியா (7-வது), இத்தாலி (8-வது), கனடா (9-வது) மற்றும் சுவிட்சர்லாந்து (10-வது) இடத்திலும் உள்ளன.

இந்த தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் 121-வது இடத்தில் உள்ளது.


9.ஆசிரியர் தினத்தையொட்டி நல்லாசிரியர் விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த விழாவை தலைமை தாங்கி நடத்தினார்.

விருது பெறும் 377 ஆசிரியர்களுக்கு தலா 10,000 ரூபாய் காசோலையும், 36.5 கிராம் வெள்ளிப்பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. விருது பெறுபவர்களுள் 32 மெட்ரிக்பள்ளி, 2 ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் 3 மாற்றுத்திறனாளி ஆசிரியர்களும் உள்ளடங்குவர்.


8.இந்திய விமானப்படைக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவில் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


7. சென்னையில் இருந்து ரஷ்யாவின் விளாதிவோஸ்டாக் இடையில் , கப்பல் போக்குவரத்து துவக்குவதன் மூலம், 24 நாட்களில் பொருட்களை கொண்டு வர முடியும்.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக, ரஷ்யா சென்றார். விளாதிவோஸ்டாக் நகரில், இந்திய – ரஷ்யா இடையிலான 20வது மாநாட்டில் பங்கேற்றார். இரு நாடுகளுக்கு இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


6. ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கிழக்கு பொருளாதார மாநாட்டில் பங்கேற்றார். ரஷ்யா அதிபர் புதின் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் தூர கிழக்கு பகுதி வளர்ச்சிக்கு ‘கிழக்கை நோக்கி’ கொள்கையின் அடிப்படையில் 100 கோடி டாலர் கடன் உதவி அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.


5. உலக அளவில் அதிக தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகள் 8 ஆயிரத்து 134 டன் எடை கொண்ட தங்கத்துடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 3 ஆயிரத்து 367 டன் தங்க கையிருப்புடன் ஜெர்மனி 2ம் இடமும், 2 ஆயிரத்து 451 டன் தங்கத்துடன் சர்வதேச நாணய நிதியம் 3ம் இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 10 வது இடத்தை பிடித்துள்ளது.


4. ஹரியாணா காங்கிரஸ் தலைவராக குமாரி செல்ஜா நியமனம்– ஹரியாணாவில்  சட்டப் பேரவைத் தேரர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த மாநில காங்கிரஸ் தலைவராக குமாரி செல்ஜாவும், சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


3. மக்கள் தொகை பெருக்கம்…….முதலிடத்தை நோக்கி இந்தியா!

                2011 ஆம் ஆண்டு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 19 லட்சத்து 3 ஆயிரத்து நானுாற்றி இருபத்தி இரண்டு போ் எனக் கணக்கிடப்பட்டது.தற்போது இந்த 7 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 135 கோடியை தாண்டிவிட்டது.


2. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், தேர்வு குழு தலைவராகவும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.


1. சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி ஏ.கே.மிட்டல்  நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

Download PDF Link-I | Link-II

2018-19 CURRENT AFFAIRS-Click Herer

tnpsc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.